Published Date: September 17, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநகராட்சி அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை மத்திய தொகுதியில் இரு முறை போட்டியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீண்டும் அதே பகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார்.
அதனால் தொகுதியில் உள்ள கடைசி கட்ட மக்கள் குறைபாடுகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றி அவர் கடந்த சில வாரங்களாக தொகுதியில் வார்டு வாரியாக மாநகராட்சி ஆணையளர் சித்ரா மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்கிறார்.
நேற்று மண்டலம் -3, 77வது வார்டுக்குட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் ஆய்வு செய்தார். வாரம் இரண்டு வார்டுகள் என்ற விகிதத்தில் வீடு வீடாக சென்று தனிப்பட்ட முறையில் அவர் பொதுமக்களை சந்தித்து அவர்கள் குறைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து அதே இடத்தில் மாநகராட்சி ஆணையர் சித்ரா மற்றும் அதிகாரிகளுடன் அவற்றை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிடுகிறார்.
Media: Hindu Tamil